பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் உள்ள வியட்நாம் தூதரகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளர் திரு நிகுயென் பூ ட்ரோங்கிற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்

प्रविष्टि तिथि: 25 JUL 2024 5:57PM by PIB Chennai

அண்மையில் காலமான வியட்நாமைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளர் திரு நிகுயென் பூ ட்ரோங்கிற்கு புதுதில்லியில் உள்ள வியட்நாம் தூதரகத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். வியட்நாம் சோசலிச குடியரசின் தூதர் திரு நுயென் தான் ஹைவிடம் பாதுகாப்பு அமைச்சர் இரங்கல் தெரிவித்தார்.

பின்னர் அவர் அங்கிருந்த இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வியட்நாம் தலைவரை இழந்துள்ள இத்தருணத்தில் அவருடைய குடும்பத்தினர், அந்நாட்டு மக்கள் ஆகியோருக்கு இந்தியா உறுதுணையுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.   இருதரப்பு உறவை வலுப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்பையும் பாதுகாப்பு அமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037066

***

IR/AG/KR/DL


(रिलीज़ आईडी: 2037137) आगंतुक पटल : 84
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP