சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள்

Posted On: 25 JUL 2024 1:33PM by PIB Chennai

காற்று மாசுபாடு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என  மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

மூச்சுத்திணறல் மற்றும் அது தொடர்பான நோய்களுக்கு வேறு பல காரணங்களுடன் காற்று மாசுபாடும் ஒரு காரணமாக கருதப்படுகிறது என அவர் தெரிவித்தார். 

உணவுப் பழக்க வழக்கங்கள், தொழில் ரீதியான பழக்க வழக்கங்கள், சமூகப் பொருளாதார நிலை, மருத்துவக் காரணங்கள், நோய் எதிர்ப்பு சக்தி, பரம்பரை உள்ளிட்ட  பல்வேறு  காரணங்களால்  மனிதர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இது தவிர, சுற்றுச்சூழல் தொடர்பான பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இத்தகைய பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், காற்றின் தரத்தை  மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036727

*** 

PKV/KPG/DL


(Release ID: 2037119) Visitor Counter : 62