இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி மற்றும் ஆதரவு
Posted On:
25 JUL 2024 3:58PM by PIB Chennai
ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளுக்கு தயாராவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம், ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் அணியினருக்கு மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் ஆதரவு அளித்து வருகிறது.
இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம் உள்ளிட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு ஆகியவை 2024 பாரிஸ் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் அணியினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான ஊட்டச்சத்து, உபகரண உதவி, பயிற்சி, சிறந்த வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவற்றிற்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
பெரிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க வீரர்களை ஒலிம்பிக் பிரிவு தேர்வு செய்கிறது.
வாராந்திர அடிப்படையில் விளையாட்டு வீரர்களின் செயல்திறனை தொடர்ந்து கண்காணித்தல், மதிப்பாய்வு செய்தல்,
பெரு நிறுவனங்கள் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கூடுதல் விளையாட்டு நிதி,
சிறந்த சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தேர்வுக் கொள்கைகளை விரிவாக ஆய்வு செய்தல்,
இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையங்களில் உள்ள அனைத்து வசதிகளையும் மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், குதிரையேற்றம், கோல்ஃப், ஹாக்கி, ஜூடோ, படகுப் போட்டி, துப்பாக்கி சுடுதல், நீச்சல், படகு செலுத்துதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளுதூக்குதல் மற்றும் மல்யுத்தம் உள்ளிட்ட 16 பிரிவுகளில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.
விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி முகாம் வசதிகள், பன்னாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு போன்றவை அளிக்கப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு அரசுத் திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியுதவி மூலம் சுமார் ரூ.470 கோடி நிதியுதவி பெறப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036935
***
IR/AG/DL
(Release ID: 2037067)
Visitor Counter : 77