சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
கிரேட் நிக்கோபார் திட்டத்தால் சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கப்படாது
Posted On:
25 JUL 2024 1:34PM by PIB Chennai
கிரேட் நிக்கோபார் தீவில் நீடிக்கவல்ல வளர்ச்சித் திட்டத்திற்காக 130.75 சதுர கிலோ மீட்டர் வன நிலத்தை பயன்படுத்த மத்திய அரசு 2022, அக்டோபர் 27 அன்று கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது. இருப்பினும், இதற்கு ஈடாக 65.99 சதுர கிலோ மீட்டர் பரப்பு பசுமை மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மரங்கள் வெட்டப்படமாட்டாது. மேம்பாட்டுக்கான பகுதியில் 15 சதவீத நிலம் பசுமையாக இருக்கும் என்பதால், 9.64 லட்சத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
சுற்றுச்சூழல் அனுமதிச் சான்று, வனத்துறை அனுமதிச் சான்று ஆகியவற்றின் பகுதியாக தாவரங்கள் பெருமளவில் பாதிக்காமலும், வெட்டப்படுவதற்கு ஈடாக மரங்கள் வளர்ப்பதற்கும் திட்ட ஒப்புதலின்போது நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், கிரேட் நிக்கோபார் மேம்பாட்டு திட்டம் காரணமாக சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கப்படாது என்று சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036729
***
SMB/RS/KR
(Release ID: 2036988)
Visitor Counter : 49