சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சாலைப் பராமரிப்புக்கு கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ.1,214 கோடி நிதி ஒதுக்கீடு
Posted On:
25 JUL 2024 12:22PM by PIB Chennai
திருத்தப்பட்ட சி.ஆர்.ஐ.எஃப் சட்டம், 2000-ன் விதிகளின்படி, மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாநில சாலைகளை மேம்படுத்தவும், பராமரிக்கவும் மாநில அரசுகள் யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சி.ஆர்.ஐ.எஃப் திட்டத்தின் கீழ் மாநில சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்ததற்காக மாநில யூனியன் பிரதேச வாரியாக நிதி விடுவிப்பு மற்றும் செலவிடப்பட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுக்கு 2021-22-ல் ரூ.350.15 கோடியும், 2022-23-ல் ரூ.377.63 கோடியும், 2023-24-ல் ரூ.486.15 கோடியும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.22.95 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சி.ஆர்.ஐ.எஃப் திட்டத்தின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட இறுதி செய்யப்பட்ட மாநிலயூனியன் பிரதேச சாலைத் திட்டங்களின் மாநில யூனியன் பிரதேச வாரியான விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
தற்போது, ரூ.37,098 கோடி மதிப்பிலான 14,369 கி.மீ. நீளமுள்ள 1,209 மாநில சாலைப் பணிகள் செயலாக்கத்தில் உள்ளன. 2027ஆம் ஆண்டில் இவை படிப்படியாக முடிக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் அமைச்சின் முதன்மையான பொறுப்பாகும். 2014 மார்ச் மாதத்தில் 91,287 கிலோ மீட்டராக இருந்த தேசிய நெடுஞ்சாலை தற்போது 1,46,126 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036678
----
(Release ID: 2036678)
PKV/KPG/KR
(Release ID: 2036853)
Visitor Counter : 73