உள்துறை அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது
Posted On:
24 JUL 2024 5:01PM by PIB Chennai
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 1328 கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், 2023-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி வரை எந்த ஒரு கல்வீச்சு சம்பவமும் நடைபெறவில்லை. 2018-ம் ஆண்டு 52 போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், 2023-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி வரை எந்த ஒரு போராட்டமும் நடைபெறவில்லை. 2018-ம் ஆண்டு 228 தீவிரவாதம் தொடர்புடைய சம்பவங்கள் நடைபெற்றது. இது 2023-ம் ஆண்டு 46 சம்பவங்களாகவும், 2024-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி வரை 11 சம்பவங்களாகவும் குறைந்துள்ளது. 2018-ம் ஆண்டு 189 என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், அது 2023-ம் ஆண்டு 48 சம்பவங்களாகவும், 2024-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி வரை 21 சம்பவங்களாகவும் குறைந்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்கள் உற்சாகமாக பங்கேற்றனர். சட்டம் ஒழுங்கு மேம்பட்டதன் காரணமாக, 2023-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு 2.11 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 2.5 மடங்கு அதிகரித்தது.
இத்தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
***
(Release ID: 2036387)
IR/AG/KR
(Release ID: 2036802)
Visitor Counter : 53