உள்துறை அமைச்சகம்
தடய அறிவியல் ஆய்வகங்கள்,கட்டமைப்பு
Posted On:
24 JUL 2024 5:02PM by PIB Chennai
நாட்டில் சண்டிகர், தில்லி, போபால், புனே, கொல்கத்தா, குவஹாத்தி மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் 7 மத்திய தடய அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன.
நாட்டில் தடய அறிவியலுக்கான அமைப்பு உட்பட புலனாய்வு, வழக்குத் தொடர்வதற்கான திறன்களை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், புலனாய்வு உள்ளிட்ட மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்தல், குற்றம், குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர்தல் மற்றும் தொடர்புடைய தடய அறிவியல் வசதிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட மாநிலம், யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்புகளாகும்.
நாட்டில் தடயவியல் ஆய்வகங்கள், தடயவியல் கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது:
போபால், குவஹாத்தி, புனே, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகங்களை நவீனப்படுத்துதல்.
போதை பொருட்கள், டிஜிட்டல் தடயவியல், மரபணு தடய பகுப்பாய்வு, தடய உளவியல் ஆகிய புதிய பிரிவுகளில் மத்திய தடய அறிவியல் ஆய்வகங்களில் உள்ள இயந்திரங்கள், உபகரணங்களை மேம்படுத்துதல்.
சண்டிகரில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் அதிநவீன மரபணு பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதியை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது. தமிழ்நாட்டில் ஒரு தடய அறிவியல் ஆய்வகமும், 10 மண்டல தடய அறிவியல் ஆய்வகங்களும் உள்ளன.
இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பந்தி சஞ்சய் குமார் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
***
(Release ID: 2036389)
IR/AG/KR
(Release ID: 2036800)
Visitor Counter : 52