திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசத்தில் திறன் மேம்பாட்டு திட்டங்கள்

प्रविष्टि तिथि: 24 JUL 2024 3:21PM by PIB Chennai

மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய திறன் இயக்கம் பல்வேறு திறன் மேம்பாட்டு மையங்கள், கல்லூரிகள் மற்றும் மையங்கள் மூலம் திறன் பயிற்சி, மறுதிறன் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை மத்தியப் பிரதேசம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சமூக பிரிவினருக்கும் அளித்து வருகிறது.

தொழில் பயிற்சி நிலையங்களில் இடஒதுக்கீட்டுக் கொள்கை அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளால் பின்பற்றப்படுகிறது.

பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதம் வரை மொத்தம் 1,48,11,506 பேர் பயனடைந்துள்ளனர். இவர்களில்  7,30,078 பேர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகள் ஆவர். கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் 2018-ம் முதல் 2023-ம் ஆண்டு வரை மொத்தம் 79,51,834 பேர் பயனடைந்துள்ளனர்.  இவர்களில் 6,38,630 பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இத்தகவலை மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

***

(Release ID: 2036320)

IR/AG/KR


(रिलीज़ आईडी: 2036762) आगंतुक पटल : 73
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP