சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
வடகிழக்கு பிராந்தியத்தில் சாலைக் கட்டமைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
25 JUL 2024 12:18PM by PIB Chennai
கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.1,07,504 கோடி செலவில் 9,984 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5,055 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் 1,18,894 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பிராந்தியத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதில் அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. மொத்த பட்ஜெட்டில் 10 சதவீதம் வடகிழக்கு பிராந்தியத்திற்கு ஒதுக்கப்படுகிறது. வடகிழக்கு பிராந்தியத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன:
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
(Release ID: 2036673)
PKV/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2036692)
வருகையாளர் எண்ணிக்கை : 89