கூட்டுறவு அமைச்சகம்

தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களுக்கான மாதிரி விதிமுறைகள்

Posted On: 24 JUL 2024 5:29PM by PIB Chennai

தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களை பஞ்சாயத்து  / கிராமப்புற அளவில் வலிமையான பொருளாதார அமைப்புகளாக மாற்றி, அவற்றின் வர்த்தக செயல்பாடுகளை பன்முகப்படுத்த ஏதுவாக, இந்த சங்கங்களுக்கான மாதிரி விதிமுறைகளை, மாநிலங்கள்  / யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், நபார்டு வங்கி, தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்புகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்டவற்றுடன் கலந்தாலோசித்து, மத்திய கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

அனைத்து மாநிலங்களும் பின்பற்றுவதற்காக இந்த விதிமுறைகள் 2023, ஜனவரி 5 அன்று அனுப்பப்பட்டது.

இந்தப் புதிய விதிமுறைகளின்படி, பால்வளம், மீன்வளம், கிடங்கு அமைத்தல், உணவு தானியக் கொள்முதல், உரம், விதை, எல்பிஜி / சிஎன்ஜி / பெட்ரோல் / டீசல்  விநியோக மையங்கள் அமைத்தல், குறுகிய மற்றும் நீண்ட கால கடன் வழங்குதல், நியாய விலைக் கடைகள், பொது சேவை மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட 25 வகையான வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளை ஏற்றுக் கொண்டதன் மூலம், தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் தற்போது  பன்முக சேவை மையங்களாக செயல்படுவதோடு, அவற்றின் செயல்பாட்டுத் திறன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை மேம்படுத்தி கிராமப்புறங்களில் உறுப்பினராக உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன்களை வழங்கி, அவர்களது  வருமானத்தை அதிகரிக்க உதவ முடியும் என்றும்  அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036423

*** 

MM/KPG/DL



(Release ID: 2036533) Visitor Counter : 5


Read this release in: English , Urdu , Marathi