கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கூட்டுறவு கொள்கை

Posted On: 24 JUL 2024 5:30PM by PIB Chennai

தேசிய கூட்டுறவு கொள்கையின் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு இறுதி செய்யும் நிலையில் உள்ளதாக மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த அமைச்சர் திரு அமித் ஷா, புதிய தேசிய கூட்டுறவு கொள்கையை உருவாக்க, திரு சுரேஷ் பிரபாகர் பிரபு தலைமையில், 48 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய அளவிலான குழு அமைக்கப்பட்டு, அக்குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்திருப்பதாகக் கூறியுள்ளார். இந்த  வரைவுக் கொள்கையை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத்துறை வல்லுநர்கள், தேசிய / மாநில / மாவட்ட / தொடக்கநிலை கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கூட்டுறவுத்துறை  செயலாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளின் அதிகாரிகளும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

மாநில அளவிலான  கூட்டுறவு சங்கங்கள் அந்தந்த மாநிலஅரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், கூட்டுறவு கூட்டாட்சி  என்ற உணர்வுடன் நாட்டில் உள்ள கூட்டுறவு அமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றி வருவதாகவும் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036425 

***

MM/KPG/DL


(Release ID: 2036508)