சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இந்தியாவில் சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள்
प्रविष्टि तिथि:
24 JUL 2024 1:54PM by PIB Chennai
நாட்டில் 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைகள் குறித்து விவரங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறை அளித்துள்ளது.
2018-ம் ஆண்டில் 1,57,593 பேரும், 2019-ம் ஆண்டில் 1,58,984 பேரும், 2020-ம் ஆண்டில் 1,38,383 பேரும், 2021-ம் ஆண்டில் 1,53,972 பேரும், 2022-ம் ஆண்டில் 1,68,491 பேரும் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.
2022-ம் ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறியதால், உயிரிழந்தவர்களின் விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் 1,19,904 பேர் உயிரிழந்தனர். ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் 4,201 பேரும், தவறான பாதைகளில் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் 9,094 பேரும், சிவப்பு விளக்கு எல்லையைத் தாண்டியதால் ஏற்பட்ட விபத்தில் 1,462 பேரும், மொபைல் போன் பேசிக்கொண்டே சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 3,395 பேரும், மற்ற காரணங்களால் 30,435 பேரும் உயிரிழந்தனர்.
இத்தகவலை மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036268
***
IR/RS/KR
(रिलीज़ आईडी: 2036350)
आगंतुक पटल : 142