சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய சுங்கக் கட்டண வசூல் முறை

இடுகை இடப்பட்ட நாள்: 24 JUL 2024 1:57PM by PIB Chennai

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு - மைசூரு இடையேயான  தேசிய நெடுஞ்சாலை எண் 275 மற்றும் ஹரியானாவில் உள்ள பானிபட் – ஹிஸார் இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண் 709 (பழைய எண் 71A) ஆகிய இரு நெடுஞ்சாலைப் பிரிவுகளில், ஜிஎன்எஸ்எஸ் எனப்படும் உலகளாவிய போக்குவரத்து செயற்கைக் கோள் நடைமுறை அடிப்படையிலான மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறை முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஃபாஸ்டேக் கட்டண வசூல் வசதியுடன் கூடுதலாக இந்தப் புதிய முறையை அமல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

*** 

(Release ID: 2036273)

MM/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2036319) வருகையாளர் எண்ணிக்கை : 171
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP