தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

6-ஜி அணுகு மையங்களை உருவாக்க ஐஐடி ரூர்க்கி மற்றும் மாண்டியுடன் சி-டாட் ஒப்பந்தம்

Posted On: 24 JUL 2024 12:45PM by PIB Chennai

புதிய தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்தியத் தொலைத்தொடர்புத் துறைக்கு உட்பட்ட முன்னணி தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமேட்டிக்ஸ் வளர்ச்சி மையம் (சி-டாட்),  ‘செல் இல்லாத’ 6-ஜி அணுகு மையங்களை உருவாக்குவதற்காக, இந்தியத்  தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) ரூர்க்கி மற்றும் மாண்டியுடன்  ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இவ்விரு ஐஐடி-க்களும் இணைந்து இந்தப் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க உள்ளன.

இந்த ஒப்பந்தம், மத்தியத் தொலைத்தொடர்புத் துறையின், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி நிதியத்தின் கீழ், கையெழுத்தாகியுள்ளது. இந்த நிதியம், உள்நாட்டு தொழில் நிறுவனங்கள், இந்திய புத்தொழில் நிறுவனங்கள், கல்வி  நிலையங்கள், தொழில்நுட்ப  வடிவமைப்பு, உருவாக்கம், தொலைத்தொடர்பு சாதனங்களை வணிகமயமாக்குவதற்கான ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு  நிதியுதவி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

வழக்கமான செல்போன் கட்டமைப்புகள், நுகர்வோரின் செல்போன்களை பழுதுபார்க்க, ஒவ்வொரு செல்லையும் 4-ஜி / 5-ஜி போன்ற மையங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய செல்லுலார் இடவியலை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

ஆனால், செல் இல்லாத  மிமோ எனப்படும் பல்வகை இடுபொருள் மற்றும் பல்வகை உற்பத்திப் பொருள், செல் எல்லைகள், செல் சிந்தனைகளை ஒழித்து, ஒரே நேரத்தில் ஏராளமான வாடிக்கையாளர்களின் சாதனங்களை பல்வேறு இடங்களிலும் பழுதுபார்க்கக்  கூடிய வகையில், உருவாக்கப்படும் சாதனமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036236

*** 

MM/KPG/KR


(Release ID: 2036279) Visitor Counter : 72