அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புத்தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்கு, ஊதியத்துடன் கூடிய பயிற்சி அறிமுகம் போன்ற துணிச்சலான, புதுமையான நடவடிக்கைகள் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த சூழலுக்கு 2024-25-ம் ஆண்டு பட்ஜெட் ஊக்கமளிக்கும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
23 JUL 2024 4:45PM by PIB Chennai
2024-25-ம் ஆண்டு பட்ஜெட்டில் புத்தொழில் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு, ஊதியத்துடன் கூடிய பயிற்சி அறிமுகம் போன்ற துணிச்சலான, புதுமையான நடவடிக்கைகள் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த சூழலுக்கு ஊக்கமளிக்கும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில், அறிவியல் மற்றும் விண்வெளி தொடர்பான அமைச்சகங்களுக்குப் பொறுப்பு வகித்த அமைச்சர் என்ற முறையிலும், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை மிகவும் ஆர்வத்துடன் ஊக்குவித்தவர் என்ற முறையிலும், டாக்டர் ஜிதேந்திர சிங், முத்ரா கடன் வரம்பை ரூ. 20 லட்சமாக உயர்த்தியதையும், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கான ஒதுக்கீட்டை ரூ .1 லட்சம் கோடியாக அதிகரித்தையும், அடுத்த பத்து ஆண்டுகளில் ஐந்து மடங்காக அதிகரிக்க திட்டமிடுவதையும், விண்வெளி புத்தொழில் நிறுவனங்களுக்காக ரூ .1,000 கோடி அளவில் கூட்டு வணிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய புத்தொழில் சூழலுக்கு ஊக்கமளிக்கும் வகையில், வரிவிலக்கு அளிக்கப்பட்டதற்காக தமது மகிழ்ச்சியையும், திருப்தியையும் அவர் வெளியிட்டுள்ளார்.
புத்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளித்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், திறன்பயிற்சி உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதையும் குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasege.aspx?PRID=2035851
***
(रिलीज़ आईडी: 2036029)
आगंतुक पटल : 91