கலாசாரத்துறை அமைச்சகம்
தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை மத்திய அரசு மேம்படுத்துகிறது
Posted On:
22 JUL 2024 1:48PM by PIB Chennai
தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய 6 இந்திய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
2004, அக்டோபர் 12 அன்று தமிழுக்கும், 2005, நவம்பர் 25 அன்று சம்ஸ்கிருதத்திற்கும், 2008, அக்டோபர் 31 அன்று கன்னடத்திற்கும், 2008, அக்டோபர் 31 அன்று தெலுங்கு மொழிக்கும் , 2013 ஆகஸ்ட் 8 அன்று மலையாளத்திற்கும், 2014 மார்ச் 11 அன்று ஒடியா மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
செம்மொழிகள் உட்பட இந்திய மொழிகள் அனைத்தையும் மேம்படுத்துவது அரசின் கொள்கையாகும். புதிய கல்விக் கொள்கை 2020, இந்திய மொழிகள் அனைத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம், செம்மொழிகள் உட்பட அனைத்து மொழிகளையும் மேம்படுத்த பாடுபட்டு வருகிறது. செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனம் தமிழ் மொழியை மேம்படுத்தி வருகிறது. 3 மத்திய பல்கலைக்கழகங்கள் மூலம் சமஸ்கிருத மொழியை மத்திய அரசு மேம்படுத்துகிறது. சமஸ்கிருத மொழியில் பயிற்றுவிப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் இந்த 3 பல்கலைக்கழங்களும் நிதியுதவி வழங்குகிறது.
செம்மொழிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி:
ரூபாய் லட்சத்தில்
ஆண்டு
|
கன்னடம்
|
தெலுங்கு
|
ஒடியா
|
மலையாளம்
|
தமிழ்
|
2014-15
|
100.00
|
100.00
|
|
|
8.80
|
2015-16
|
100.00
|
100.00
|
|
|
11.89
|
2016-17
|
100.00
|
100.00
|
|
|
5.02
|
2017-18
|
100.00
|
100.00
|
|
|
10.27
|
2018-19
|
99.00
|
100.00
|
|
|
5.46
|
2019-20
|
107.00
|
107.00
|
|
|
9.83
|
2020-21
|
108.00
|
147.00
|
8.00
|
8.00
|
1200
|
2021-22
|
106.50
|
103.00
|
58.38
|
63.97
|
1200
|
2022-23
|
171.75
|
171.75
|
176.75
|
186.75
|
1200
|
2023-24
|
154.50
|
154.50
|
138.50
|
112.50
|
1525
|
மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
-----
(Release ID: 2034905)
SMB/KPG/KR
(Release ID: 2034993)
Visitor Counter : 85