கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கலாச்சார பாரம்பரிய முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்

Posted On: 22 JUL 2024 1:51PM by PIB Chennai

கலாசார பாரம்பரிய முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய கலாச்சார அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

கலாச்சார விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், உலக பாரம்பரிய தினம், உலக பாரம்பரிய வாரம், சர்வதேச அருங்காட்சியக தினம், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களையொட்டி, கண்காட்சிகள், விரிவுரைகள், ஸ்லைடு ஷோக்கள், பயிலரங்குகள்,   பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பிற நிகழ்ச்சிகள் மூலம் அமைச்சகம் தொடர்ந்து கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் உள்ள காட்சி விளக்க மையங்களில் காணொலிப் படங்கள் காண்பிக்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, அம்பேத்கர் ஜெயந்திரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள், வாசிப்பு நாள், சர்வதேச அருங்காட்சியக தினம், ஆசிரியர் தினம் போன்ற முக்கியமான நிகழ்வுகளின் போது, புத்தக கண்காட்சிகள், கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு கலாச்சார அமைச்சகம் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கலைக்கூடங்கள், நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பிரிவு சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி, நூலகங்களின் திருவிழா மற்றும் இந்திய கலை மற்றும் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை பயிலரங்குகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், மாஸ்டர் வகுப்புகள், நேரடி பயிற்சி போன்றவற்றின் மூலம் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

****

PKV/KV/KR

(Release ID: 2034908)


(Release ID: 2034980)