சுரங்கங்கள் அமைச்சகம்
தேசிய நிலச்சரிவு முன்னெச்சரிக்கை மையம் தொடக்கம்
Posted On:
19 JUL 2024 6:24PM by PIB Chennai
கொல்கத்தா சால்ட் லேக் நகரில் உள்ள தாரித்ரி வளாகத்தில் உள்ள இந்திய புவியியல் ஆய்வு கழகத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய நிலச்சரிவு முன்னெச்சரிக்கை மையத்தை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இன்று (19.07.2024) தொடங்கிவைத்தார். பூஷான்கேத் இணையதளம், பூஷ்கலான் செல்போன் செயலியையும் அமைச்சர் தொடங்கிவைத்தார்.
இந்திய புவியியல் ஆய்வு கழகத்தின் தலைமை இயக்குநர் திரு ஜனார்த்தன் பிரசாத் மற்றும் பல்வேறு பேரிடர் மேலாண்மை அமைப்புகளின் நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கிஷன் ரெட்டி, பேரிடர் மேலாண்மையில் இந்திய புவியியல் ஆய்வு கழகத்தின் சிக்கலான பணியை குறிப்பாக நிலச்சரிவுகளின் போது மேற்கொள்ளப்படும் பணியை பாராட்டினார். இந்த அமைப்பின் உயர் அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதோடு, தேசிய நிலச்சரிவு முன்னெச்சரிக்கை மையத்தை (என்எல்எஃப்சி) தொடங்கியிருப்பதையும் பாராட்டியதோடு நாட்டின் தாதுவளத் தேவை மற்றும் பேரிடர் மேலாண்மை பணிகளை முழுமையாக நிறைவேற்றுமாறும் கேட்டுக்கொண்டார். 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு ஏற்ப பணியாற்றுமாறும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034442
***
MM/AG/DL
(Release ID: 2034482)