குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலையான தொழில்கள் மூலம் மகளிருக்கு அதிகாரமளித்தல்

प्रविष्टि तिथि: 19 JUL 2024 5:26PM by PIB Chennai

மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம், கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம், மகளிர் தொழில் முனைவோர் அமைப்புகளுடன் இணைந்து பெண் தொழில் முனைவோருக்கான யஷஸ்வினி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் 19.07.2024 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்ஜி, இணையமைச்சர் செல்வி. சோபா கரந்த்லஜே, ராஜஸ்தான் மாநில தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன்குமார்  விஷ்னோய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்ஜி, மகளிர் பன்னெடுங்காலமாக வீட்டுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.  அவர்கள் சம்பளமின்றியும், அங்கீகரிக்கப்படாத வேலைகளையும் செய்ய நிர்பந்திக்கப்பட்டதாக  கூறிய அவர், ஆனால் தற்போது பெண்கள் பணிபுரியாத துறையே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்றார்.

அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோர், மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை பயன்படுத்தி பலனடையுமாறு கேட்டுக்கொண்டார். குறைந்த முதலீட்டில் சிறிய அளவிலான தொழில்களை தொடங்கிய பல பெண்கள் தற்போது ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வெற்றி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034414

***

MM/AG/DL

 


(रिलीज़ आईडी: 2034459) आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi