விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இயற்கை வேளாண்மை அறிவியல் குறித்து லக்னோவில் மண்டல ஆலோசனைக் கூட்டம்

Posted On: 19 JUL 2024 4:38PM by PIB Chennai

லக்னோவில் இன்று (19.07.2024) நடைபெற்ற “இயற்கை வேளாண்மை அறிவியல் குறித்த மண்டல ஆலோசனை” நிகழ்வில் மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் உரையாற்றினார். ரசாயனங்களில் இருந்து அன்னை பூமியை பாதுகாப்போம் என்ற பிரதமரின் கனவை நிறைவேற்ற வரும் காலங்களில் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும், இதன் மூலம் அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அமைச்சர் பேசும் போது கூறினார். 3 ஆண்டுகளுக்கு தங்கள் நிலத்தில் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று அவர் கூறினார். இயற்கை முறையில் வேளாண்மை செய்வதால் சாகுபடி குறைவதை ஈடுசெய்ய இந்த மானியம் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

இயற்கை வேளாண்மைக்கு உதவும் வகையில், அதுகுறித்து பயிலவும், ஆய்வு செய்யவும் நாட்டில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களில் பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.  இயற்கை வேளாண்மை குறித்து நாட்டில் ஒரு கோடி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், இவர்கள் நாட்டின்  அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குஜராத் ஆளுநர் திரு ஆச்சாரிய தேவ்விரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034373

***

SMB/RS/DL



(Release ID: 2034429) Visitor Counter : 55


Read this release in: English , Urdu , Hindi