சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொதுசுகாதார நிபுணர்களுடன் திருமதி அனுப்பிரியா பட்டேல் சந்திப்பு

Posted On: 19 JUL 2024 3:30PM by PIB Chennai

உலக மக்கள்தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் இன்று புதுதில்லியில் பொதுசுகாதார நிபுணர்களை சந்தித்தார். “கருத்தரித்தலுக்கு இடையே ஆரோக்கியமான  காலத்தையும், இடைவெளியையும் உறுதி செய்ய  கடைக்கோடி வரை கருத்துருவாக்கல்: பிரச்சனைகளும், சவால்களும்” என்பது இந்த சந்திப்பின் மையப்பொருளாக இருந்தது.

இந்த சந்திப்பின் போது, நிபுணர்களுடன் உரையாற்றிய அமைச்சர், போதிய கால இடைவெளியில் கருத்தரித்தல் என்பது  தாய்-சேய் நலனை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்றும், இது ஆரோக்கியத்தில் உண்டாகும் அபாயத்தை குறைத்து பெண்களுக்கு அதிகாரமளிக்கிறது என்றும் கூறினார். இந்த விஷயத்தில் அரசு எப்போதும் சரியான புரிதலுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.  அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக பேறுகால இறப்பு ஒரு லட்சம் பிறப்புக்கு 130 என்பதில் இருந்து 97-ஆக  குறைந்ததாகவும் அவர் கூறினார்.

குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் ஆண்களை ஈடுபடுத்துவது பற்றி  மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள  முயற்சிகள் பற்றியும் அமைச்சர் எடுத்துரைத்தார். 2047–க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவது பெண்களுக்கு அதிகாரமளிக்காமல்  சாத்தியமாகாது என்றும் அவர் கூறினார்.

இந்திய குடும்பக்கட்டுப்பாட்டு சங்கத்தின் தலைவர் டாக்டர் கல்பனா ஆப்தே, பாலியல், இனப்பெருக்க சுகாதாரத் துறை நிபுணர் டாக்டர் சாஸ்வதி தாஸ், மும்பையில் உள்ள சர்வதேச மக்கள் தொகை அறிவியல் கல்விக் கழகத்தின் மகப்பேறு, சமூக மக்கள்தொகையியல் துறை தலைவர் டாக்டர் சந்திரசேகர் உள்ளிட்டோர் அமைச்சருடனான சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034338  

***

SMB/RS/KR


(Release ID: 2034371) Visitor Counter : 81