சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் உள்ள தில்லி ஹாட்டில் லோக் சம்வர்தன் திருவிழாவை மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 18 JUL 2024 8:53PM by PIB Chennai

மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் 100 நாள் நடவடிக்கை திட்டத்தின் ஒரு பகுதியாக, அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் சாதனைகளை எடுத்துக் கூறும் விதமாக புதுதில்லியில் உள்ள தில்லி ஹாட்டில், லோக் சம்வர்தன் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடங்கிவைத்துப் பேசிய மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியுதவி கழகம் மூலம் 2024-25-ம் ஆண்டில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ரூ.1000 கோடிக்கும் மேல் கடனுதவி வழங்கப்படவுள்ளதாக கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியுதவி கழகத்தில் பல்வேறு திட்டங்களை வங்கிகள் மூலம் செயல்படுத்த ஏதுவாக, தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியுதவி கழகத்திற்கும், இந்தியன் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் கிராமின் வங்கி ஆகியவற்றிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034163

***

MM/AG/RR


(रिलीज़ आईडी: 2034316) आगंतुक पटल : 130
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Punjabi