புவி அறிவியல் அமைச்சகம்

லட்சத்தீவு, டாமன் டையூ, தாத்ரா - நகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் நிர்வாகி திரு பிரபுல் படேல் மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்கைச் சந்தித்தார்

Posted On: 17 JUL 2024 3:28PM by PIB Chennai

லட்சத்தீவுகள், டாமன் டையூ, தாத்ரா - நகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் நிர்வாகி திரு பிரபுல் படேல் இன்று (17.05.2024) மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார்.

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் சுத்தமான குடிநீரை வழங்கி மக்களுக்கு  நிவாரணம் அளித்த உலகின் முதலாவது குறைந்த வெப்பநிலை வெப்ப உப்புநீக்கி  ஆலையை புவி அறிவியல் அமைச்சகம் நிறுவியதற்காக திரு ஜிதேந்திர சிங்கிற்கு திரு படேல் நன்றி தெரிவித்தார்.

லட்சத்தீவின் சுற்றுலாவுக்கும் வளர்ச்சிக்கும  இரண்டு விமான நிலையங்கள் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார். 2014 ம் ஆண்டு முதல் யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிப் பயணம், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் அதிகரிப்பு போன்றவற்றை அவர் எடுத்துரைத்தார்.

லட்சத்தீவின் வளர்ச்சிக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த திரு ஜிதேந்திர சிங், வரும் ஆண்டுகளில் இது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கிய மையமாக மாறும் என்றார்.

அத்துடன் வேலைவாய்ப்பும் பொருளாதாரமும் உயரும்  என்று திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார். லட்டசத்தீவு யூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.

***

PLM/KV

 



(Release ID: 2033842) Visitor Counter : 17