பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படை வினாடி வினா - திங்க் 2024
प्रविष्टि तिथि:
16 JUL 2024 2:15PM by PIB Chennai
தேசிய அளவிலான தனித்துவமான வினாடி வினா போட்டியான இந்திய கடற்படை வினாடி வினா போட்டிக்கான (THINQ2024) அறிவிப்பை கடற்படை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வு அறிவார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்தவும் இளம் உள்ளங்களை ஊக்குவிக்கவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. முதல் இரண்டு வினாடி வினா போட்டிகள் மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து இந்த ஆண்டும் கடற்படை இந்தப் போட்டியை நடத்துகிறது.
இந்த ஆண்டு வினாடி வினாவுக்கான கருப்பொருள் "வளர்ச்சியடைந்த பாரதம்" என்பதாகும். சுதந்திரத்தின் 100-வது ஆண்டான 2047-வது ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கும் வகையில் இந்த கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசத்தை கட்டியெழுப்புதல் குறித்தும் அதில் மாணவர்கள் பங்கு குறித்தும் இது இளம் உள்ளங்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
இந்த போட்டியில் நாடு முழுவதும் 9 முதல் 12 -ஆம் வகுப்பு வரையில் பயிலும் அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம். இது நேரடியாகவும், இணைய தளம் மூலமாகவும் என இரண்டு வகைகளிலும் நடைபெறும். இப்போட்டி நான்கு நிலைகளில் நடைபெறும். முதல் இரண்டு கட்டங்கள் இணைய தள முறையில் நடைபெறும். அதைத் தொடர்ந்து மண்டல அளவிலான தேர்வுச் சுற்று நடைபெறும். முதல் 16 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மண்டல அளவிலான தேர்வுச் சுற்றுக்கு தகுதி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியில் இருந்து 8 அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும். அரையிறுதிப் போட்டியும், இறுதிப் போட்டியும் தெற்குக் கடற்படைக் கட்டளையில் நேரடி முறையில் நடத்தப்படும். இந்த மதிப்புமிக்க போட்டியின் வெற்றியாளர்களுக்கு அற்புதமான பரிசுகள் காத்திருக்கின்றன.
இந்த நிகழ்வு தொடர்பான விரிவான விவரங்களுக்கு, www.indiannavythinq.in என்ற பிரத்யேக இணைய தள பக்கத்தைக் காணலாம்.
***
(Release ID: 2033619)
PLM/KV/KR
(रिलीज़ आईडी: 2033631)
आगंतुक पटल : 204