சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
தனிப்பட்ட வாழ்க்கையிலும், பணிச் சூழலிலும் மற்றவர்களின் பிரச்சினைளைப் புரிந்து கொண்டு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்: மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால்
Posted On:
15 JUL 2024 7:16PM by PIB Chennai
மத்திய சட்டம், நீதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சட்ட விவகாரங்கள் துறை, தேசிய ஊடக மையத்தில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் “மகிழ்ச்சி – மனித மதிப்புகளின் நிலை” என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் விரிவுரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் எழுத்தாளரும் வாழ்க்கைத் திறன் பயிற்சியாளருமான டாக்டர் நந்திதேஷ் நிலாய் பங்கேற்று உரை நிகழ்த்தினார். வழங்கினார். மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைச்சக அதிகாரிகளைப் பாராட்டிய திரு அர்ஜுன் ராம் மேக்வால், வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவசியம் என்றார். சுயபரிசோதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுக்கு ஊக்கம் என்று அவர் கூறினார். உடலுக்கு உடற்பயிற்சி, மனதிற்கு நட்பு, ஆன்மாவுக்கு ஆன்மீகம் ஆகியவை இன்றியமையாதவை என்று அவர் குறிப்பிட்டார். உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதைப் போலவே மனதையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவது முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்
டாக்டர் நந்திதேஷ் நிலே தமது உரையில், வாழ்க்கையின் அனுபவங்களைக் கடந்து செல்லும்போது, சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே புரிந்து கொள்ள வேண்டும் என்றும், எந்தவொரு சூழ்நிலையையும் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சயின் தொடக்கத்தில், சட்ட விவகாரங்கள் துறை செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி பேச்சாளரை அறிமுகம் செய்து வைத்து, இந்த சொற்பொழிவு உரை நிகழ்ச்சியின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
சட்டத் துறை, பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் ஊழியர்களும் ஊடகத்துறையினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மன அழுத்தமில்லாத பணிச்சூழலை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக, சட்ட விவகாரங்கள் துறை அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது.
Release ID: 2033470
PLM/KR
***
(Release ID: 2033551)
Visitor Counter : 58