வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2024, ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 5.40 சதவீதம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
Posted On:
15 JUL 2024 3:12PM by PIB Chennai
2024, ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த (வணிக, சேவைகள் இணைந்தது) ஏற்றுமதி 65.47 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.40 சதவீதம் அதிகமாகும். 2024, ஜூன் மாதத்திற்கான மொத்த (வணிக, சேவைகள் இணைந்தது) இறக்குமதி 73.47 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.29 சதவீதம் அதிகமாகும்.
வணிகப்பொருட்களின் ஏற்றுமதி 2024, ஜூன் மாதத்தில் 35.20 பில்லியன் அமெரிக்க டாலரைப் பதிவு செய்தது. இது 2023, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2.55 சதவீதம் அதிகமாகும்.
பெட்ரோலியம் அல்லாத, மணிக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி 2024, ஜூன் மாதத்தில் 27.43 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 2023, ஜூன் மாதத்தைவிட, 10.27 சதவீதம் அதிகரித்து 2024, ஜூன் மாதத்தில் 9.39 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி 2024, ஜூன் மாதத்தின் 2.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2023, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 16. 91 சதவீதம் அதிகமாகும்.
மருந்துகள் ஏற்றுமதி 2023, ஜூன் மாதத்தை விட, 9.93 சதவீதம் அதிகரித்து 2024, ஜூன் மாதத்தில் 2.47 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. காஃபி ஏற்றுமதி 2023, ஜூன் மாதத்தை விட, 70.02 சதவீதம் அதிகரித்து 2024, ஜூன் மாதத்தில் 0.20 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
இயற்கை மற்றும் செயற்கை ரசாயனம் பொருட்களின் ஏற்றுமதி 2024, ஜூன் மாதத்தில் 2.29 பில்லியன் அமெரக்க டாலராக இருந்தது இது 2023, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 3.32 சதவீதம் அதிகமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033324
***
SMB/RS/DL
(Release ID: 2033463)
Visitor Counter : 138