ஆயுஷ்
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் சவ்ஷ்ருதம் 2024 கருத்தரங்கில், அறுவை சிகிச்சை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது
Posted On:
15 JUL 2024 3:45PM by PIB Chennai
சுஷ்ருதா ஜெயந்தி 2024 விழாவையொட்டி, சவ்ஷ்ருதம் என்ற இரண்டாவது தேசிய கருத்தரங்கை அறுவை சிகிச்சைத் துறை புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் நடத்தியது. அறுவை சிகிச்சையின் தந்தையாகக் கருதப்படும் சுஷ்ருதாவை கௌரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 15 அன்று சுஷ்ருதா ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜூலை 13 அன்று தொடங்கிய கருத்தரங்கு இன்று நிறைவடைந்தது.
தொடக்கவிழாவில் போபால் எய்ம்ஸ் மருத்துமனையின் நிறுவனர், இயக்குநர் பேராசிரியர் சந்தீப் குமார் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். தில்லி ஏஐஐஏ நிறுவன இயக்குநர் பத்மஸ்ரீ பேராசிரியர் மனோரஞ்சன் சாஹு உள்ளிட்டோர் இதில் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கின் முதல் 2 நாட்களில் 25 அறுவை சிகிச்சைக்கு செயல்விளக்கங்கள் செய்து காட்டப்பட்டன. இதன் மூலம் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர்களிடமிருந்து பல்வேறு அறுவை சிகிச்சை தொழில்நுட்ப முறைகளைக் கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.
பித்தப்பை கல், குடல் இறக்க அறுவை சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை இதில் செய்து காட்டப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033350
***
SMB/IR/KPG/RR
(Release ID: 2033392)
Visitor Counter : 81