எரிசக்தி அமைச்சகம்

மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் 2400 மெகாவாட் தேரி நீர்மின் வளாகத்தைப் பார்வையிட்டார்

Posted On: 15 JUL 2024 1:37PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலம் தேரி கார்வால் பகுதியில் உள்ள 2400 மெகாவாட் தேரி நீர்மின் வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை மத்திய மின்சாரம், வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு மனோகர் லால் 2024 ஜூலை 15 அன்று ஆய்வு செய்தார்.

நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்கட்டமைப்பின் முக்கிய அங்கமான தேரி நீர்மின் மேம்பாட்டுக் கழக நிறுவனத்தின் (டிஎச்டிசிஐஎல்) கீழ் உள்ள  முன்னோடித் திட்டமான 1000 மெகாவாட் திறனுடைய தேரி நீரேற்று சேமிப்பு ஆலையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை திரு மனோகர் லால் பார்வையிட்டார். பட்டர்ஃபிளை வால்வ் அறை, எந்திர வளாகம், தேரி நீரேற்று சேமிப்பு ஆலையின் வெளியேற்றம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் மத்திய அமைச்சர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் தற்போதுள்ள நீர் மேலாண்மை அமைப்புகளுடன் நீரேற்று சேமிப்பு ஆலையை ஒருங்கிணைப்பதில்  முக்கிய அம்சமான நதி இணைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர், புதுப்பிக்கத்தக்க மற்றும் நீடிக்கத்தக்க நீர்மின் உற்பத்தியை முன்னெடுத்துச் செல்வதில் அயராத அர்ப்பணிப்புக்காகவும், கடின உழைப்புக்காகவும் தேரி நீர்மின் மேம்பாட்டுக்கழக நிறுவனத்தின் அனைத்துக் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். 2400 மெகாவாட் தேரி நீர்மின் வளாகத்தை உருவாக்குவதில் குழுவின் குறிப்பிடத்தக்க சாதனைகளையும், உயர் தரங்களையும் திரு மனோகர் லால் பாராட்டினார். மேலும் நீர்மின் திட்டங்களில் தேரி நீர்மின் மேம்பாட்டுக் கழக நிறுவனத்தின் பங்களிப்பு 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை எவ்வாறு உள்ளடக்கியிருக்கிறது என்பதை அமைச்சர் திரு மனோகர் லால் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033254

***

SMB/IR/KPG/RR



(Release ID: 2033360) Visitor Counter : 18