பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

தேசிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும்- மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 14 JUL 2024 7:25PM by PIB Chennai

அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, தேசிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.

உதம்பூரில் இன்று (14.07.2024) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள வளர்ச்சித் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சொந்தமானவை அல்ல என்றும் அவை அனைத்து தரப்பு மக்களின் நலனுக்கானவை என்றும் தெரிவித்தார்.

உதம்பூரில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். உதம்பூர் பகுதியில் பிரபலமான லாவண்டர் சாகுபடி, பால் பொருட்கள் உற்பத்தி குறித்து ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். உதம்பூரின் இயற்கை வளங்கள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். இந்த வளங்கள் இந்தியப் பொருளாதாரம் உயரும்போது அதற்கு கூடுதல் மதிப்பு சேர்க்கும் என்று மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

***

PLM/KV

 



(Release ID: 2033174) Visitor Counter : 42