குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
உலக தீவிரவாத எதிர்ப்பு கவுன்சிலின் (ஜிசிடிசி) 3-வது இணையப் பாதுகாப்பு மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
13 JUL 2024 7:53PM by PIB Chennai
உங்கள் அனைவருக்கும் வணக்கம்,
உங்களது செயல்திட்டம் மிகவும் முக்கியமானது. அச்சுறுத்தும் போக்குகளில் இருந்து வெளிவர உதவ வேண்டும். எனவே, இது மிகவும் முக்கியமானது. நீங்கள் உண்மையில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் ஊக்குவிக்க முடியும். இணையப் பாதுகாப்பின் பல்வேறு அம்சங்களை நீங்கள் விவாதித்திருப்பது பாராட்டுக்குரியது.
இந்தியா வெறும் 6 ஆண்டுகளில் சாதித்ததை பொதுவாக 40 ஆண்டுகளில்கூட அடைய முடியாது. எனவே, நமது பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க, இணையதள குற்றங்களைத் தடுக்க வேண்டும். நாம் மிகவும் தயாராக இருக்க வேண்டும். ஒரு பாதுகாப்பான செயல்முறை இருக்க வேண்டும்.
சட்டத் துறையினருக்கும், புலனாய்வு அமைப்புகளுக்கும் கூட இணைய தள குற்றங்கள் சவாலானது. இணைய தள குற்றம் தொடர்பாக எங்கு புகாரளிப்பது, என்பது மக்கள் பலருக்குத் தெரியாது. இந்த குற்றங்கள் நாட்டின் எந்த மூலை முடுக்கிலும் நடக்கலாம்.
இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், மெஷின் லேர்னிங், போன்றவை பலருக்கு புதிய வார்த்தைகளாக இருக்கும். அகராதியில் இந்த வார்த்தைகளையும் வெளிப்பாடுகளையும் நீங்கள் பார்த்தால், அவற்றுக்கு சரியான அர்த்தம் இல்லை. ஆனால் இதற்கு பிரம்மாண்டமான ஆற்றல் இருக்கிறது.
புதிய தொழில்நுட்பங்களுடன் அமைப்பை புதுப்பித்து அவர்களின் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, அவற்றை வாய்ப்புகளாகப் பயன்படுத்துவது நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயம்.
2047-ல் நமது சுதந்திரத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் போது, பாரதம் வளர்ந்த நாடாக இருக்க வேண்டும். இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும். ஆனால் இதுபோன்ற இணைய குற்றங்களுக்கு, இதுபோன்ற ஊடுருவல்களுக்கு நாம் தயாராக இல்லாதபோது சிக்கல் ஏற்படும். எனவே இணையப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.
இயந்திர கற்றல் என்பது மிகவும் உதவியாக இருக்கும் ஒரு செயல்முறையாகும்.
நமது டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய இணைய பாதுகாப்புக் கொள்கை, இந்திய கணினி அவசரகால குழுவை நிறுவுதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ல் மாற்றங்கள், தேசிய தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையம், டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் 2023, போன்ற முன்முயற்சிகள் முக்கியமானவை.
டிஜிட்டல் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் 2023-ல் மாற்றங்கள் முக்கியமானவை. ஆனால் மக்கள் அதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவை டிஜிட்டல் வல்லரசாக மட்டுமின்றி, இணைய பாதுகாப்பான நாடாகவும் மாற்ற நாம் உறுதி ஏற்போம். பாதுகாப்பான டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கிய நமது பயணம் ஒரு கூட்டு முயற்சியாகும்.
நண்பர்களே, புதுமையான, அனைவரையும் உள்ளடக்கிய, எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பான டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.
மிக்க நன்றி.
***
PLM/KV
(Release ID: 2033134)
Visitor Counter : 60