சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கியத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் ஆகியவை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே பி நட்டா ஆய்வு செய்தார்
Posted On:
12 JUL 2024 6:39PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கிய திட்டம், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் ஆகிய திட்டங்கள் குறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா ஆய்வு செய்தார்.
திட்டங்களின் முக்கிய அம்சங்கள், தற்போதைய நிலை, அவற்றின் செயல்பாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து அமைச்சருக்கு இக்கூட்டத்தில் விரிவாக விளக்கப்பட்டது. 34.7 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் மூலம், மருத்துவமனைகளில் 7.35 கோடி சிகிச்சைகளுக்கு, ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்தத் தொலைநோக்குத் திட்டங்களின் பலன்கள் சமூகத்தின் பின் தங்கிய பிரிவினரை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். ஆயுஷ்மான் அட்டைப் பயன்பாட்டை வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் சிறந்த அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் கூறினார். பயனாளிகளின் அனுபவங்களைக் கேட்டறிந்து இந்தத் திட்டங்களை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் திரு ஜேபி நட்டா கேட்டுக் கொண்டார்.
***
PLM/KV
(Release ID: 2032960)
Visitor Counter : 78