கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' என்ற தொலைநோக்கு பார்வையை விரைந்து நிறைவேற்றும் வகையில், விழிஞ்சம் துறைமுகம் செயல்படுகிறது: மத்திய கப்பல்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்
प्रविष्टि तिथि:
12 JUL 2024 6:05PM by PIB Chennai
கேரள மாநிலம் விழிஞ்சத்தில் உள்ள இந்தியாவின் முதலாவது ஆழ்கடல் கொள்கலன் மாற்று துறைமுகம் அதன் மேம்பட்ட செயல்பாட்டைத் தொடங்கும் எம்.வி. சான் பெர்னாண்டோ கப்பலை அந்த துறைமுகத்தில் மத்திய துறைமுகங்கள், கப்பல் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இன்று வரவேற்றார்.
இந்த கப்பல் அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது. கேரள முதலமைச்சர் திரு பினாரி விஜயன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு சர்பானந்த சோனோவால், இந்தியாவின் முதலாவது ஆழ்கடல் சர்வதேச கொள்கலன் மாற்று முனையமான விழிஞ்சத்தில் முதல் கப்பல் தரையிறங்கியுள்ள நிலையில், இந்தியாவின் கடல்சார் துறைக்கு இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்றார். கேரள அரசு, இந்திய அரசு, அதானி துறைமுக சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியவற்றின் கூட்டுப் பங்களிப்பு இந்த வெற்றிக்கு காரணம் என்று திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.
விழிஞ்சம் துறைமுகம் என்பது கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு உத்திசார் கடல்சார் திட்டமாகும். 18,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் தொடங்கப்பட்ட பசுமைத் துறைமுகத் திட்டம் இதுவாகும்.
***
PLM/AG/DL
(रिलीज़ आईडी: 2032873)
आगंतुक पटल : 136