வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

குஜராத்தில் சரக்குப்போக்குவரத்தை மேம்படுத்த தேசிய தொழில் வழித்தட வளர்ச்சிக் கழகம், சரக்குப் போக்குவரத்து தரவு சேவை நிறுவனம் மற்றும் குஜராத் உள்கட்டமைப்பு வளர்ச்சி வாரியத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 12 JUL 2024 4:11PM by PIB Chennai

ஒருங்கிணைந்த சரக்குப்போக்குவரத்து பரிமாற்ற தளத்தை (ULIP) மேலும் பயனுள்ளதாக்கும் நோக்கத்தோடு, குஜராத்தின் சரக்குப் போக்குவரத்துப் பரப்பளவை டிஜிட்டல் மயமாக்க, தேசிய தொழில் வழித்தட வளர்ச்சிக் கழகம், சரக்குப்போக்குவரத்து தரவு சேவை நிறுவனம் மற்றும் குஜராத் உள்கட்டமைப்பு வளர்ச்சி வாரியத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒருங்கிணைப்பு,  சரக்குப்போக்குவரத்து நடவடிக்கைகள் சீர் செய்யப்படுவதை காட்சிப்படுத்துவதோடு, பல்வேறு மாநில துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகப்படுத்தி, தரவு நுண்ணறிவு மூலமாக முடிவெடுக்கும் நடைமுறைகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விரிவான எந்திரம், மாநிலம் முழுவதும் சரக்குப்போக்குவரத்து செயல்பாடுகளை திறமையான முறையில் கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2032742

***

LKS/RS/RR



(Release ID: 2032762) Visitor Counter : 16