திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
மீரட்டில் உள்ள சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மக்கள் கல்வி நிலையங்களின் மண்டல மாநாட்டில் மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
11 JUL 2024 9:20PM by PIB Chennai
மீரட்டில் உள்ள சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மக்கள் கல்வி நிலையங்களின் (ஜன் சிக்ஷன் சன்ஸ்தான்-ஜேஎஸ்எஸ்) மண்டல மாநாட்டில் மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி உரையாற்றினார்.
திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் ஜேஎஸ்எஸ் எனப்படும் மக்கள் கல்வி நிலையத் திட்டம் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் கூறினார். பாரம்பரிய திறன்களுக்கு அப்பால், எதிர்கால வேலைவாய்ப்பு சந்தைக்கு தனிநபர்களை சிறப்பாக தயார்படுத்துவதற்கு ஜேஎஸ்எஸ் முக்கிய பங்காற்றுவதாக அவர் கூறினார். தில்லி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜேஎஸ்எஸ் பயிற்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியையும் அமைச்சர் திறந்து வைத்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
ஜேஎஸ்எஸ் எனப்படும் மக்கள் கல்வி நிலையத் திட்டத்தில் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ சங்கங்கள் மூலம் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. அடிப்படை கல்வி பெற்ற நபர்களுக்கும், பள்ளி இடைநின்றவர்களுக்கும் பல்வேறு திறன் பயிற்சிகளை ஜேஎஸ்எஸ் வழங்குகிறது.
தற்போது, 26 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் 290-க்கும் மேற்பட்ட ஜேஎஸ்எஸ்-கள் செயல்பட்டு வருகின்றன.
***
(Release ID: 2032606)
PLM/AG/RR
(रिलीज़ आईडी: 2032636)
आगंतुक पटल : 106