கலாசாரத்துறை அமைச்சகம்

தாய்லாந்து-இந்தியா இடையே பின்னிப்பிணைந்த மரபுகள்: புத்த மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை என்ற புகைப்படக் கண்காட்சியை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்

Posted On: 11 JUL 2024 5:47PM by PIB Chennai

“தாய்லாந்து-இந்தியா இடையே பின்னிப்பிணைந்த மரபுகள்: புத்த மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை” என்ற புகைப்படக் கண்காட்சியை மத்திய கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சர்  திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று புதுதில்லி தேசிய அருங்காட்சியகத்தில் தொடங்கிவைத்தார். தொடக்க விழாவில் தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் திரு மாரிஸ் சங்கியான்போங்சா, தாய்லாந்து தூதர் பட்டாரட் ஹாங்டாங் தேசிய அருங்காட்சியத்தின் தலைமை  இயக்குநர் டாக்டர் பி ஆர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு ஷெகாவத், இந்தியா- தாய்லாந்து இடையே ஆன்மீக பாலமாக பகவான் புத்தரின் சிந்தனைகள் இருப்பது பற்றியும் இது இரு நாடுகளின் தொடர்பை ஆழமாக வேரூன்ற செய்வது பற்றியும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்தை மேற்கோள் காட்டினார்.

தாய்லாந்து மன்னராட்சியும், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடன் கலாச்சாரத் துறையும், தாய்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகமும் தேசிய அருங்காட்சியகமும், சர்வதேச புத்த சமய கூட்டமைப்பும், மகா போதி சங்கமும் இணைந்து இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2032485

***

SMB/RS/DL



(Release ID: 2032553) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP