பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கான மத்திய மக்கள் குறைதீர்ப்பு, கண்காணிப்பு அமைப்பின் ஜூன் மாதத்திற்கான 23-வது மாதாந்தர அறிக்கையை மத்திய நிர்வாக சீர்திருத்தம், மக்கள் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ளது

Posted On: 10 JUL 2024 8:11PM by PIB Chennai

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கான மத்திய மக்கள் குறைதீர்ப்பு, கண்காணிப்பு அமைப்பின் (சிபிகிராம்ஸ்) ஜூன் மாதத்திற்கான 23-வது மாதாந்தர அறிக்கையை மத்திய நிர்வாக சீர்திருத்தம், மக்கள் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ளது.
2024 ஜூன் மாதத்தில்  மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களால் மொத்தம் 69940 குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. 2024 ஜூன் 30 நிலவரப்படி, மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிலிருந்து சிபிகிராம்ஸ்-சில் பெறப்பட்டவற்றில் 1,95,082 குறைகள்  தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன. 
2024 ஜூன் மாதத்தில் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களால் சேகரிக்கப்பட்ட 26552 பின்னூட்டங்களில் 38 சதவீதம் பேர் பெறப்பட்ட தீர்வுக்கு திருப்தி தெரிவித்துள்ளனர். 

**********


SMB/RS/KV



(Release ID: 2032356) Visitor Counter : 48


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP