தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (2016=100) - மே, 2024

प्रविष्टि तिथि: 10 JUL 2024 1:34PM by PIB Chennai

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணைக்கப்பட்ட அலுவலகமான தொழிலாளர் பணியகம், நாட்டின் 88 தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் பரவியுள்ள 317 சந்தைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சில்லறை விலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழில்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டைத் தொகுத்து வருகிறது. 2024 மே மாதத்திற்கான குறியீடு இந்த செய்திக்குறிப்பில் வெளியிடப்படுகிறது.

 

2024 மே மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு 0.5 புள்ளிகள் அதிகரித்து 139.9 ஆக இருந்தது.

2024 மே மாதத்திற்கான ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் 2023 மே மாதத்தின் 4.42% உடன் ஒப்பிடுகையில் 3.86% ஆக குறைந்தது.

 

நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் (பொது)

 

ஏப்ரல், 2024 மற்றும் மே, 2024 க்கான அகில இந்திய குழு வாரியான நுகர்வோர் விலைக் குறியீடு:

 

வரிசை எண்

குழுக்கள்

ஏப்ரல்,2024

மே,2024

1

உணவு மற்றும் பானங்கள்

143.4

145.2

2

பான், சுபாரி, புகையிலை & போதைப்பொருட்கள்

161.1

161.2

3

ஆடை & காலணிகள்

143.2

143.6

4

வீட்டுவசதி

128.4

128.4

5

எரிபொருள் & ஒளி

152.8

149.5

6

இதரப் பொருட்கள்

136.1

136.1

 

பொதுக் குறியீடு

139.4

139.9

 

***

(Release ID:2032059)

PKV/RR/KR


(रिलीज़ आईडी: 2032123) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Punjabi , Gujarati