வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024 ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் வடகிழக்கு மாநிலங்களில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் ஆய்வு செய்தார்

प्रविष्टि तिथि: 09 JUL 2024 10:00PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால், 2024 ஜூலை 8 அன்று அருணாச்சலப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டார்.

ஜூலை 8 அன்று நடைபெற்ற கூட்டத்தின் போது, நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் சாதனைகள், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் உள்ளிட்ட முதன்மைத் திட்டங்களின் அமலாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  

பிராந்தியத்தின் தனித்துவமான பருவநிலை சூழல்களைக் கருத்தில் கொண்டு மாநில அரசின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதியளித்தார். இந்தக் கூட்டத்தில் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர், துணை முதலமைச்சர், அருணாச்சலப் பிரதேச தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜூலை 9 அன்று, வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களின் அமலாக்கம் குறித்து திரு மனோகர்லால் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார். இக்கூட்டத்தில் அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள்  பங்கேற்றனர்.

***

(Release ID: 2031949)

SMB/PLM/AG/KR


(रिलीज़ आईडी: 2032058) आगंतुक पटल : 109
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी