சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பிரதமரின் மக்கள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்தார்
Posted On:
09 JUL 2024 6:29PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு இன்று சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் பிரதம மந்திரி மக்கள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடு மற்றும் நிதி நிலையை ஆய்வு செய்தார். அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு, துணை முதலமைச்சர் திரு சௌனா மெய்ன், அருணாச்சலப் பிரதேச சமூக நீதி அதிகாரமளித்தல் மற்றும் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கென்டோ ஜினி மற்றும் அமைச்சரின் ஆலோசகர் திரு ரோட் புய் ஆகியோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளுக்காக மாநிலத்திற்கு மத்திய பங்காக ரூ.35 கோடி நிதி உதவியை விடுவிப்பதாகவும் திரு ரிஜிஜு அறிவித்தார்.
பாரம்பரிய இறையியல் கல்வியை மதச்சார்பின்மையாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் புத்த மத மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (ரூ. 41.07 கோடி மொத்த மதிப்பீட்டில்) ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 10 திட்டங்களை (மொத்த மதிப்பீட்டு ரூ. 41.07 கோடி) விரைந்து செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
*****
PKV/KPG/DL
(Release ID: 2031876)
Visitor Counter : 61