புவி அறிவியல் அமைச்சகம்
வானிலை, மழை முன்னறிவிப்புக்கு மேம்படுத்தப்பட்ட முறையை தில்லி பெறவிருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
08 JUL 2024 6:52PM by PIB Chennai
தேசிய தலைநகர் உட்பட நாடு முழுவதும் வரவிருக்கின்ற பருவமழை காலம் குறித்த பொதுமக்களின் கவலைகளைப் போக்குவதற்காக பிரத்யேகமாக தில்லியில் இன்று கூட்டப்பட்ட சிறப்பு உயர்நிலைக் கூட்டத்தில் பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், வானிலை, மழை முன்னறிவிப்புக்கு மேம்படுத்தப்பட்ட முறையை தில்லி பெறவிருப்பதாக கூறினார்.
மக்களின் வசதியையும், வாழ்க்கையை எளிதாக்குவதையும் உறுதி செய்ய மனித வேலை நாட்களைப் பாதுகாப்பதோடு எதிர்பாராத வானிலை மாற்றங்களால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியையும் சரி செய்ய மக்களுக்கு உகந்த முன்னறிவிப்பு முறையை ஏற்படுத்துவது சாத்தியமானதுதான் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது தில்லியில், 17 தானியங்கி வானிலை முன்னறிவிப்பு மையங்கள் இருப்பதாகவும், விரைவில் மேலும் 50 மையங்களை நிறுவ உத்தரவிட்டிருப்பதாகவும் பின்னர் இது 100 மையங்கள் வரை அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பெரு நகரங்களில் மட்டுமின்றி 10 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கும், 2-ம் நிலை நகரங்கள், தொலைதூரப் பகுதிகளுக்கும் இத்தகைய மேம்படுத்தப்பட்ட வானிலை முன்னறிவிப்பு வசதி விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் டாக்டர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2031598
***
SMB/KPG/DL
(Release ID: 2031623)
Visitor Counter : 55