சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

என்பிஇஎம்எஸ் அமைப்பு இந்தியாவின் 50 நகரங்களில் 71 மையங்களில் 35,819 விண்ணப்பதாரர்களுக்கு வெளிநாட்டு மருத்துவப் பட்டத் தேர்வை நடத்தியது

Posted On: 06 JUL 2024 6:15PM by PIB Chennai

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (என்பிஇஎம்எஸ்- NBEMS) 35,819 விண்ணப்பதாரர்களுக்கு வெளிநாட்டு மருத்துவ பட்டதாரித் தேர்வை (FMGE) இன்று (06-07-2024) நடத்தியது.

21 மாநிலங்களில் 50 நகரங்களில் உள்ள 71 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. கடுமையான தேர்வு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்வு நடத்துவதை மேற்பார்வையிட 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்களை என்பிஇஎம்எஸ் நியமித்தது. 45 பேர் அடங்கிய பறக்கும் படையும் ஏற்படுத்தப்பட்டது.

மத்திய சுகாதார அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, அரசின் முன்னணி சுகாதார நிறுவனங்கள் சார்பில் அனைத்துத் தேர்வு மையங்களிலும் ஒரு மூத்த பிரதிநிதி நியமிக்கப்பட்டிருந்தார். எங்கும் முறைகேடுகள் நடைபெறவில்லை. இன்றைய தேர்வு முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.

***

PLM/KV

 



(Release ID: 2031270) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Marathi , Hindi