தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் நலன் தொடர்பான மாநில அரசுகளின் அறிக்கைகயை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
06 JUL 2024 4:18PM by PIB Chennai
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய தொழிலாளர் நலத்துறை தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையை, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.
இதே போல், அமேசான் கிடங்கு தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஹரியானா அரசு, மத்திய தொழிலாளர் நலத்துறைக்கு அறிக்கை அனுப்பியது. அது தொடர்பான விரிவான அறிக்கையும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டங்களின் சில விதிகளை அமேசான் மீறியுள்ளதாகவும் தொழிலாளர் சட்டங்களின் விதிகளின்படி ஹரியானா அரசு சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
PLM/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2031245)
வருகையாளர் எண்ணிக்கை : 149