மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மத்திய ஆயுத காவல் படைகள் தேர்வு- 2023-ன் இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

Posted On: 05 JUL 2024 8:34PM by PIB Chennai

6 ஆகஸ்ட் 2023 அன்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் மத்திய ஆயுத காவல் படைகளின் உதவி கமாண்டன்ட்கள் பணிக்கான தேர்வு நடைபெற்றதி. 13.05.2024 முதல் 14.06.2024 வரை நேர்காணல் நடைபெற்றது. அதன் அடிப்படையில், மத்திய ஆயுத காவல் படைகளான எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை மற்றும் சாஸ்திர சீமா பால் படைகளுக்கு உதவி கமாண்டன்ட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 312 பேர் நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 112 பேர் பொதுப் பிரிவினர் ஆவார்கள்.  33 பேர் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர்.  95 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.  47 பேர் பட்டியல் வகுப்பினர். 25 பேர் பட்டியல் பழங்குடியினர்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு தொடர்பான தகவல்களை வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை நேரிலோ அல்லது 011-23385271/ 23381125 என்ற எண்கள் மூலமாகவோ பெறலாம்.  முடிவுகளை யுபிஎஸ்சி-யின் இணையதளமான www.upsc.gov.in -ல் காணலாம்.

**************

PLM/KV



(Release ID: 2031235) Visitor Counter : 65