சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திவ்ய கலா மேளா என்ற மாற்றுத் திறனாளி தொழில்முனைவோரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி புவனேஸ்வரில் தொடங்கியது

प्रविष्टि तिथि: 05 JUL 2024 6:50PM by PIB Chennai


மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, தேசிய மாற்றுத் திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து, ஒடிசாவின் புவனேஸ்வரில் மாற்றுத் திறனாளி தொழில்முனைவோர், கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் திறமை மற்றும் கைவினைத்திறனைக் கொண்டாட "திவ்ய கலா மேளா" என்ற கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி வளாகத்தில் 2024 ஜூலை 5 முதல் 2024 ஜூலை 11 வரை நடைபெறுகிறது.

திவ்ய கலா மேளா கண்காட்சி மற்றும் திவ்ய கலா சக்தி என்ற கலை நிகழ்ச்சியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் திரு பி.எல்.வர்மா தனது உரையில், பிரதமர் திரு நரேந்திர மோடி மாற்றுத்திறனாளிகளின் நலனில் தனி கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.   பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

******* 

PLM/KV
 


(रिलीज़ आईडी: 2031233) आगंतुक पटल : 120
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Odia , Telugu