நித்தி ஆயோக்

நித்தி ஆயோக்கின் மகளிர் தொழில்முனைவோர் திட்ட தளமும் டிரான்ஸ்யூனியன் சிபில் நிறுவனமும் இணைந்து பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்க புதிய திட்டத்தைத் தொடங்கி உள்ளன

Posted On: 05 JUL 2024 7:20PM by PIB Chennai

நித்தி ஆயோக்கின் பெண் தொழில்முனைவோர் திட்ட தளமும் டிரான்ஸ்யூனியன் சிபில் நிறுவனமும் செஹர்  (SEHER) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளன.

இந்தியாவில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு நிதி தொடர்பான தகவல்களை வழங்குதல், வணிகத் திறன்களை அதிகரித்தல் போன்றவை  இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பெண் தொழில்முனைவோர் திட்ட தளம் (WEP) என்பது நித்தி ஆயோக்-கால் நிறுவப்பட்ட ஒரு பொது-தனியார் கூட்டு தளமாகும். இது இந்தியாவில் பெண் தொழில்முனைவோருக்கு ஒரு சிறந்த அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் உதயம் பதிவு தளத்தின் தகவல்படி, இந்தியாவில் 63 மில்லியன் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 20.5% பெண்களுக்குச் சொந்தமானது. 

பெண்கள் தலைமையிலான தொழில்கள் வளர்ந்து வருவதால், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது நிலையான வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. கடன் மற்றும் நிதி மேம்பாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம், செஹர் திட்டம் பெண் தொழில்முனைவோருக்கு பெரிதும் பயன் அளிக்கும்.

 
*** 

PLM/KV



(Release ID: 2031232) Visitor Counter : 60