சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, 2024 ஜூலை 5 முதல் 11 வரை புவனேஸ்வரில் திவ்ய கலா மேளா, திவ்ய கலா சக்தி நிகழ்ச்சிகளை நடத்துகிறது
Posted On:
04 JUL 2024 5:36PM by PIB Chennai
மத்திய அரசின் சமூக நீதி> அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி, மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து, நாடு முழுவதிலும் உள்ள மாற்றுத்திறனாளியும் கைவினைஞர்களின் திறமைகளையும் கைவினைத்திறனை கொண்டாடும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வை நடத்த உள்ளது. திவ்ய கலா மேளா, திவ்ய கலா சக்தி என்ற இந்த நிகழ்வு 2024 ஜூலை 5 முதல் 11 வரை ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெறும்.
இந்த நிகழ்வை 2024, 5 ஜூலை அன்று மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் துறை இணையமைச்சர் திரு பி எல் வர்மா தொடங்கி வைத்தார். உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தராகண்ட், ஒடிசா ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்காகப் பணியாற்றும் முக்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்தத் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றன.
கலாச்சார நிகழ்ச்சியான திவ்ய கலா சக்தி-யில் இந்த ஆறு மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெறும். திவ்ய கலா மேளா கண்காட்சியில் 190 மாற்றுத் திறனாளிக் கைவினைஞர்கள், கலைஞர்கள், தொழில்முனைவோரால் வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படும்.
***
SMB/BR/RR/DL
(Release ID: 2031041)
Visitor Counter : 40