வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சர் திரு மனோகர் லாலை சந்தித்தார்

प्रविष्टि तिथि: 05 JUL 2024 4:03PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு மனோகர் லாலை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு நேற்று (2024 ஜூலை 4) புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்.

மின்சார வாகனங்கள், மெட்ரோ ரயில் கட்டமைப்பு மேம்பாடு, கழிவு மேலாண்மை உள்ளிட்ட முக்கியமான அம்சங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். பசுமை ஹைட்ரஜன் முயற்சிகளில் ஆந்திராவை முன்னணி மாநிலமாக மாற்ற மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என திரு என் சந்திரபாபு நாயுடு அப்போது கேட்டுக் கொண்டார். வீட்டுவசதித் திட்டங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.  அம்ருத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

 

***

(Release ID: 2030982)

SMB/PLM/RR


(रिलीज़ आईडी: 2031013) आगंतुक पटल : 95
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Telugu