வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான பிரதமரின் 'நமோ ட்ரோன் சகோதரி' திட்டத்துடன், ட்ரோன் சுற்றுச்சூழல் மேம்பாடு ஒத்துப்போகிறது

Posted On: 04 JUL 2024 8:55PM by PIB Chennai

புதுதில்லியில் பி.ஹெச்.டி தொழில் வர்த்தகக் கழகம் (பி.ஹெச்.டி.சி.சி.ஐ) ஏற்பாடு செய்திருந்த சர்வதேச புத்தாக்க மாநாட்டில் உரையாற்றிய மத்திய வர்த்தகம் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், கடந்த மூன்று ஆண்டுகளில் விரைவான வளர்ச்சியைக் கண்ட ட்ரோன் தொழிலை ஊக்குவிக்க பிரதமர் திரு  நரேந்திர மோடியின் அரசு  தயாராக உள்ளது என்று கூறினார். புதுமையின் வலிமையில் ட்ரோன் தொழில்துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாராட்டிய திரு கோயல், ட்ரோன் சுற்றுச்சூழல் அமைப்பின் மேம்பாடு, அவற்றை நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் நிலைநிறுத்துவதும், விவசாயத் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க உதவும் பிரதமரின் 'நமோ ட்ரோன்  சகோதரி’ முன்முயற்சியுடன் ஒத்துப்போகிறது என்று  கூறினார்.

ட்ரோன் தொழிலில் காணப்படும் தொழில்நுட்ப முன்னேற்றம், ஒழுங்கற்ற வானிலை முறைகளை எதிர்த்துப் போராடவும், விவசாயிகள் அதிக தரத்தையும் அதிக அளவு விளைச்சலையும் பெற உதவும் என்று திரு கோயல்  தெரிவித்தார். ட்ரோன்களுக்கான ட்ரோன் கூறுகளுக்கான உற்பத்தியுடன் இணைந்தஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டம் இந்தத் துறை முன்னேற  ஓர் ஊக்க சக்தி ஆகும், இது அரசின் நிரந்தர மானியத் திட்டமாகக் கருதப்படக்கூடாது என்று அமைச்சர் கூறினார். "பிரதமரின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் மூன்று மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவோம் என்று நம்புகிறோம்" என்று மத்திய அமைச்சர் கூறினார்.

கூட்டுறவுத் துறை, சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு ஆகியவற்றுக்கு (எஃப்.பி.ஓ) உரங்களை வழங்குவதிலும், விரயத்தையும், செலவுகளையும் குறைப்பதற்கும்,  வேளாண் உள்கட்டமைப்பு நிதிகளின் உதவியுடன் பகிரப்பட்ட வசதியாக ட்ரோன்கள் பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

***

(Release ID: 2030851)


(Release ID: 2030928) Visitor Counter : 68


Read this release in: English , Urdu , Hindi , Marathi