மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள் மற்றும் அவற்றின் விடுதிகளில் தகவல் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை கல்வி அமைச்சகம் அமைக்கவுள்ளது
प्रविष्टि तिथि:
03 JUL 2024 5:04PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, சமக்ர சிக்ஷா விதிமுறைகளின்படி, அனைத்து கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாக்கள் மற்றும் அதன் விடுதிகளில் தகவல் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க முடிவு செய்துள்ளது. சுமார் ரூ.290 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 7 லட்சம் பெண்கள் பயனடைவார்கள்.
கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள், 6 முதல் 12-ம் வகுப்பு வரை பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கான உறைவிடப் பள்ளிகளாகும். தற்போது, நாட்டில் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5116 கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை வசதிகளை வழங்குவதன் மூலம் பின்தங்கிய பின்னணியிலிருந்து மாணவிகளின் டிஜிட்டல் இடைவெளி குறைக்கப்படும்.
***
PLM/AG/KV
(रिलीज़ आईडी: 2030472)
आगंतुक पटल : 149