பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) மனுக்கள் தொடர்பான மேல்முறையீடுகளுக்கு கிட்டத்தட்ட 100 சதவீதம் தீர்வு காணப்படுகிறது - நிலுவைப் புகார்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
03 JUL 2024 4:42PM by PIB Chennai
மத்திய தகவல் ஆணையத்தின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பேசிய அவர், தகவல் அறியும் உரிமை மனுக்கள் (ஆர்டிஐ) தொடர்பான மேல்முறையீடுகள் கிட்டத்தட்ட 100 சதவீதம் தீர்க்கப்படுவதாக கூறினார். நிலுவையில் உள்ள மனுக்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமை தொடர்பான மேல் முறையீட்டு மனுக்களின் நிலுவை அளவு, 2019-20-ம் ஆண்டில் 35718 என்ற அளவில் இருந்தது எனவும், 2021-22-ம் ஆண்டில் அது 29213 என கணிசமாகக் குறைந்தது என்றும் அவர் கூறினார். 2023-24-ம் ஆண்டில் 23087 மேல்முறையீடுகளாகவும், 2024-25-ம் ஆண்டில் 22666 மேல்முறையீடுகளாகவும் அது மேலும் குறைந்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தகவல் ஆணையத்தின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பின் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதிலும், மக்களுக்கு தகவல்களை வழங்குவதை எளிதாக்குவதிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அமைச்சர் பாராட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைத்துவம் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட ஆளுகைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
***
PLM/AG/KV
(Release ID: 2030450)
Visitor Counter : 79